தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்த பொறியியல் பட்டாதாரி இளைஞர் கவின், பள்ளி தோழியுடன் காதல் கொண்டது தொடர்பாக, தோழியின் தம்பியால் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். சாதிய நோக்கில் நடந்த இந்த ஆணவ கொலையில் முதல் தகவல் அறிக்கையில் பெண்ணின் பெற்றோரான மணிமுத்தாறு பட்டாலியன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன.
இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.













