அரசு அனுமதித்த வெளிநாட்டு சோளப்பயிர் மேய்ந்த கால்நடைகளுக்கு கருச்சிதைவு விவசாயிகள் அதிர்ச்சி

0
1330

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைவளர்ப்பு உள்ளது . தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு விவசாய நிலங்களில் பயிரிடபட்ட சோளம், கம்பு அறுவடைக்கு பின்னர் அந்த தட்டைகளை சேமித்து வைத்து உணவாக போட்டு வந்தனர்.

மேலும் மாடுகளுக்கு பச்சை தீவனங்களுக்காக நாற்றுவகைகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். அதிலும் தமிழக வேளாண்மை துறை மூலமாக பரிந்துரை செய்த கோயபஸ் 29, 31, கோ-3, கோ-4 உள்ளிட்ட நாற்றுகளை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவிற்காக போட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகள் நாற்றுகளை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் புண்ணாக்கு,பருத்திக்கொட்டை, தவிடு போன்றவற்றின் விலையும் அதிகரித்த காரணத்தினால் கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயிகளும் வறட்சி தாங்க கூடிய வெளிநாட்டு வகை நாற்றுகளை பயிரிட தொடங்கினர். ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர், குட்டை நேப்பியர் போன்ற நாற்று வகைகளை பயிரிட்டனர்.

நமது நாட்டு ரகங்களை விட வெளிநாட்டு ரகங்கள் வறட்சி தாங்கியது மட்டுமின்றி அதிக விளைச்சல் கொடுத்த காரணத்தினால் தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வேளாண்மை துறையினால் பரிந்துரைக்கப்பட்ட நாற்று பயிர்களில் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 80 டன் விளைச்சல் இருந்தால் வெளிநாட்டு நாற்று பயிர்கள் மூலமாக 200 டன் விளைச்சல் கிடைத்த காரணத்தினால் கால்நடைகளுக்கு தீவன தட்டுபாடு ஏற்படாது என்று கருதி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

மேலும் வெளிநாட்டு நாற்றுகளை அறுவடை செய்யும் போது அதிக சுனை இருக்காது என்பதால் அதனை எளிதில் அறுக்க முடிந்தது. மேலும் வெளிநாட்டு நாற்றுகள் கரும்பு பயரிடுவது போல பயிரிட்டதால் ஒரு கருணையை நட்டி வைத்தால் அதில் இருந்து முன்று கரணையாக வளர்வது மட்டுமின்றி 12 முதல் 16 அடி உயரம் வரை தன்மை கொண்டதாக உள்ளது.

எனவே கால்நடை தீவனம் விலை உயர்வு, வறட்சி ஆகிய காரணங்களினால் வெளிநாட்டு நாற்றுகளை விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலையில் அதுவே தற்போது பிரச்சினைக்குள்ளாகி உள்ளது.

ஆனால் வெளிநாட்டு நாற்று பயிர்களில் ஆக்சலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் அதனை உண்ணும் மாடு, ஆடுகளுக்கு சினைப்பிடிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கருச்சிதைவு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நாட்டு கால்நடை இனங்கள் அழியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சோளம் தட்டை பயிர்களில் ஆக்சாலிக் அமிலம் 2.8 சதவீதம் தான் இருக்க வேண்டும் என்று அரசு அனுமதித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு பயிர்களில் ஆக்சாலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் சினைப்பிடிப்பது தடைபட்டுள்ளது மட்டுமின்றி. சினைப்பிடித்துள்ள கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. எவ்வித ஆய்வு செய்யமால் வெளிநாற்று பயிர்கள் அனுமதிக்கப்பட்டது என்று தெரியவில்லை.

வெளிநாட்டு பயிர் ரகங்களை தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதனை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மானியம் கொடுத்து உள்ளநாட்டு நாற்றுகளை பயிரிட ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் தேசிய விவசாயிகள் சங்கத்தினை தலைவர் ரெங்கநாயகலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here