கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வில்லை.
இதன் காரணமாக கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கோவையில் கூடுதல் விலைக்கு விற்பது அதிகரித்தது.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள ஒரு பழைய பேப்பர் குடோனில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் (40), விக்னேஷ் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பிஓடிய திருச்சியை சேர்ந்த சங்கர் (30) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,130 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய










