ரயில் மறியல்: 200 பேர் மீது வழக்கு

0
650

அரக்கோணம் மற்றும் காட்பாடி பகுதியில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு லட்சக்கணக்கான ரயில் பயணிகள் வேலைக்காக சென்று வருகின்றனர் ரயில்களில் முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில்,மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நிலையில் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

எனவே, மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி, அரக்கோணம் அடுத்த அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை பயணிகள் மறித்து நேற்று போராட்டம் நடத்தினர்.

சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் கஜபதி புகாரின் பேரில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here