ஆதார் தகவலை மாற்ற புதிய, எளிய வழிமுறைகள்

0
579

இந்திய ஒன்றியத்தின் பொது ஆவணமாக கருதப்படும் ஆதார் கார்டை இணையம் மூலம் திருத்தவும் மாற்றவும் புதிய வழிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும்,இதனை ஆதார் சேர்க்கை மையம் மூலம் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிமுறை:

பயனர்கள் Aadhaar Enrolment/Correction/Update என்னும் ஃ பார்மினை UIDAI’s அதிகாரபூர்வ தளமான https://ssup.uidai.gov.in/ssup/ மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் பயனர்கள் தங்களது புகைப்படம், மேலும் பெயரில் ஏதும் பிழை இருந்தால் தங்களது பெயர், முகவரி போன்றவற்றினை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பின்பு அதனை ஆதார் சேர்க்கை மையத்தில் கொடுக்க வேண்டும்.
மேலும் அந்த முகாம்களில் பயனர்களின் கைரேகை, கண் ரேகை போன்றவை
கேட்கப்படும்.

இதற்கான சேவை கட்டணமாக பயனர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
பணிகள் அனைத்தும் முடிந்த பின்பு முகாமில் இருந்து பயனர்களுக்கு ஆதார் அப்டேட் செய்த ரசீது ஒன்று கொடுக்கப்படும்.
அதில் உள்ள URN மூலம் பயனர்கள் தங்களது ஆதார் அப்டேட் குறித்து அறிந்து கொள்ளலாம். ஆதார் அப்டேட் ஆன ஒரு வார காலத்தில் புதிய ஆதார் கார்டு பயனர்கள் வீட்டிற்கு வந்தடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here