பாளை சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட முத்துமனோ உடலை 72 நாட்களுக்கு பின்பு பெற்று அடக்கம்

0
877

பாளை சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட கைதி முத்து மனோவின் உடலை 72 நாட்களுக்குப் பின்னர் அவரது தந்தை பாபநாசம், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், சேரன்மகாதேவி சப் கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி ஆகியோர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக மூன்றடைப்பு முதல் நெல்லை நகரம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திரளான இளைஞர்கள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தனர். உடலைல் ஊர்வலமாக கொண்டு சென்று ஊரில் அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here