பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது

0
434

சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்த சாவித்திரி கண்ணன் (57),
தீக்கதிர், துக்ளக் பத்திரிககைகளில் எழுதி வந்தவர். தந்தி தொலைக்காட்சியிலும் சில காலம் முக்கிய பொறுப்பு வகித்தார்.

“அறம்” இதழ் என்ற இணைய இதழின் ஆசிரியராக கடந்த மூன்று வருடமாக உள்ளார்.

அண்மையில் கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்டு எழுதினார்.


பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் இன்று முற்பகலில் சீருடை அணியாக நான்கு போலீசார் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
அவருடைய மனைவி செல்போனை வாங்குவதற்கும் முயற்சி செய்துள்ளனர்.

“சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கிறோம்‌.”என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரை சாலையில் சென்றுள்ளனர். ஒரு மூத்த பத்திரிக்கையாளரை கைது செய்ய போலீசார் கையாண்ட விதம் மோசமாக இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here