முன். அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது முறையாக சோதனை

0
401

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது முறையாக இன்று காலை சோதனை தொடங்கியது.

சென்னை கோயம்புத்தூர் உட்பட வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

பெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றிய விவகாரத்தில் தனக்கு வேண்டிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்து 500 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக 2019, 20 ஆண்டுகளில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேலு மணிக்கு சொந்தமான இடங்களில் இதற்கு முன்பு இரு முறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here