நாளை காலை 11.30 மணிக்கு ராதாபுரம் தொகுதி வாக்குகள் மறு எண்ணிக்கை தொடங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மாலை நெல்லையிலிருந்து தொகுதியில் 3 இறுதி சுற்றுகளில் எண்ணப்பட்ட 36 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன. துணை ஆட்சியர் தலைமையில் வருவாய், காவல் அதிகாரிகள் உடன் சென்றனர்.
வாக்குகளை எண்ண 24 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 2 தொழில்நுட்ப அலுவலர்களையும் அனுப்பவுள்ளது.













