இந்தியாவில், மின்சாரம் தாக்கி தினமும் 30 பேர் பலியாவதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தில் உள்ளது.
ஆண்டுதோறும் மின்சாரம் தாக்கி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டில் 9,986 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். இதில், ம.பி., மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தலா ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2012-& 13ல் உ.பி.யில் 570 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஆனால் 2018-& 19ல் இந்த எண்ணிக்கை இருமடங்காகியது. அதாவது, 1,120 பேர் நடப்பு ஆண்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் நடந்த உயிரிழப்பை கணக்கிட்டால் எண்ணிக்கை 5,700ஐ கடந்துள்ளது. பல்ராம்பூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 50 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானது.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் செல்லும் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க உபி. அரசு உத்தரவிட்டது. பள்ளிக்கு மேல் செல்லும் மின்வயர்கள், மோசமான மின்சார உள்கட்டமைப்புகளை மாற்ற அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.
பல மாநிலங்கள் இந்த சம்பவங்களை தடுக்க போதுமான அதிகாரிகளை நியமிக்கவில்லை. சிறிய சம்பவங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதே கிடையாது.
இங்கு தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டு மின்சார கம்பங்களுக்கு இடையே 50 அடி இருக்க வேண்டும், மின்கம்பங்களின் உயரம் 18 அடியாக இருக்க வேண்டும் என்ற சாதாரண விதிகள் கூட பின்பற்றப்படுவது இல்லை.
மின்சார கம்பங்கள் சரியாக நடப்படாதது, பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால், காற்று, மழைக்காலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிக மின் அழுத்தம் கொண்ட கம்பிகள் செல்லும்மிடங்களின் அருகே வீடு கட்டி குடியிருக்கும் அஜாக்கிரதையும் விபத்துக்கு காரணமாகிவிடுகிறது.
இது போன்ற சம்பவங்களை தவிர்க்க தரைக்கு அடியில் மின்சார வயர்கள் பதிக்கப்படும் திட்டம் தான் சிறந்தது என்கின்றனர். ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த திட்டத்தை பின்பற்றுகின்றன.
ஆனால், இதற்கு அதிக செலவாகும் என்பதால் இதனை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தயக்கம்















