நாசரேத் – குரும்பூர் சாலையை சீரமைக்க மகளிர் கூட்டமைப்பு கோரிக்கை

0
734

நாசரேத்தில் பேரூராட்சி பகுதி அனைத்து மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவி பொன்ராணி தலைமை வகித்தார். ஒசார்ட் தொண்டு நிறுவன இயக்குநர் எழுத்தாளர் அய்கோ (கோபால்சாமி), தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமூக பணியாளர் வள்ளித்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் காமினி ராஜசெல்வி வரவேற்றார்.

இதில், செண்பகப்பூ மகளிர் சுய உதவிக்குழு உட்பட புதிதாக இணைந்துள்ள குழுக்களை சேர்த்து கூட்டமைப்பை வலிமைப்படுத்துவது, மிக மோசமான நிலையில் உள்ள நாசரேத் & குரும்பூர் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையை வலியுறுத்துவது,

கடந்த 2020ல் தூய்மைப் பணிக்காக கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு நாசரேத் பேரூராட்சி வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுப்பது, கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒசார்ட் பணியாளர்கள் சோபியா, வேல்கனி, கூட்டமைப்பு செயலாளர் முத்துமாலை, பொருளாளர் ஜெயராணி மற்றும் பகுதி குழுக்களின் ஊக்குநர்கள், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here