மதிமுகவின் ஐந்தாவது அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு வைகோ, முதன்மைச் செயலாளர் பொறுப்பிற்கு துரை வைகோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தி மு ராசேந்திரனும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பதவிக்கு கேஎம்ஏ நிஜாமும் டேட்புமனு தாக்கல் செய்தனர். அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டி இல்லை.
எனவே, வரும் ஜீன் 14ல் சென்னையில் நடைபெறும் 29 ஆவது மதிமுக பொதுக்குழுவில் அனைத்து நிருவாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
..














