நெல்லை அருகே உள்ள அடை மிதிப்பான் குளத்தில் நள்ளிரவில் சட்டவிரோதமாக குவாரியில் வெடி வைத்து கல் உடைத்தபோது ஆறு தொழிலாளிகள் கல் குவியலுக்குள் சிக்கி அதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக கல்குவாரி மேலாளரும் மற்றொருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.கல்குவாரி உரிமையாளரான காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் தேடப்பட்டு வந்த னர்

இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு விடுதியில் ரகசியமாக தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இருவரையும் போலீசார் நெல்லைக்கு அழைத்து வருகின்றனர்.













