திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் முறையாறு பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
ஓசூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற வாடகை காரும் நேருக்கு நேர் மோதின. இதில் கார் ஓட்டுநர் உட்பட மூன்று நபர்களும் பலத்த காயம் ஏற்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், காரில் பயணித்த பிபுல்குப்தா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் மனைவி அறுஷி மற்றும் ஓட்டுநர் உமேஷ் ஆகிய இருவரையும் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.














