திருச்செந்தூர் கோவிலில் நடிகர் விஷால் சுவாமி தரிசனம்

0
1761

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவருடன் திருச்சி திருமறைநாத சுவாமிகள் ஆதீனம் உடன் வந்தார்.
அவர்கள் திருச்செந்தூர் மூலவர் பாலாபிசேகம் உள்பட அபிஷேகங்களை கண்டு களித்தனர்.
அதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர்.
கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை பார்த்த பக்தர்கள் நடிகர் விஷாலுடன் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைகொடுத்தும் மகிழ்ந்தனர்.


துப்பறிவாளன் பாகம் 2 ல் நடித்து வருவதாக கூறிய நடிகர் விஷால் முதல் பாகத்தை விட மிகவும் வித்தியாசமாக இந்த படம் இருக்கும் என்று கூறினார். மேலும் தான் முருகனை நினைத்தேன். அதனால் இன்று முருகனை தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here