மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், உள்ள நெல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாமல் உள்ளதால், மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .
அரசு உத்தரவிட்டும், அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் ,நெல் குவியல்களை பராமரிக்க தினந்தோறும் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்வதாகவும் இதனால் ,மிகவும் வேதனை தருவதாக தெரிவிக்கின்றனர்.

100 மூடை அளவுள்ள கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டைகளுக்கு மேல் உள்ளதால், அருகில் உள்ள வயல்களில் நெல் களை கொட்டி உள்ளதாக கூறுகின்றனர்
.
விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் , ‘வயல்களில் உள்ள நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு பத்து நாட்களுக்கு பின்பு மறுபடியும் கொள்முதல் நிலையத்தில் வந்து அதிகாரிகள் கொட்டி விட்டுச் சென்றனர். ஆகையால், மழையில் நனைந்து நெல்கள் முளைத்து போயுள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றார்.

கொள்முதல் நிலையங்களில் உள்ள மூடைகளை ஏற்றுவதற்கு ஆறு ரூபாயும் குடோனில் இருந்து வரும் வேலையாட்களுக்கு மூடைக்கு 13 ரூபாய் போக்குவரத்திற்காக வாடகையாக பத்தாயிரம் ரூபாயும் செலவு செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இதில், அரசு கவனம் செலுத்தி செலவுகளை குறைத்து விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.













