கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ் பி வேலுமணி இருந்தபோது தனது சகோதரர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், பிணை மனு மீதான வழக்கு விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு லஞ்ச, ஊழல் தடுப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து எஸ் பி வேலுமணி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, உயர் நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது.















