பிற மதத்தினா் பற்றி அவதூறு: இந்து மகாசபை நிா்வாகி கைது

0
10014

.
வங்கதேசத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அகில பாரத இந்து மகா சபை சாா்பில் கடந்த 23 ஆம் தேதி, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆா்ப்பாட்டத்தில் பேசிய அகில பாரத இந்து மகா சபையின் மண்டல இளைஞரணித் தலைவா் பாக்ஸர் பிரேம்குமார் மாற்று மதத்தினா் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து, பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரஜினிகாந்த், பாக்ஸர் பிரேம்குமாா் மீது புகாா் அளித்தாா்.

இதையடுத்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த பந்தய சாலை போலீஸாா்
பாக்ஸர் பிரேம்குமாரை கைது செய்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here