களக்காடு அருகே சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை

0
1124

களக்காடு அருகே சிங்கி கு ளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (43). சமையல் தொழிலாளி. இவர் இன்று காலைசிங்கிகுளம் சிவன் கோயில் தெப்பகுளம் அருகே உள்ள தனது வயலுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை,தலை, மார்பு முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு ஓடிவிட்டனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர்இறந்து விட்டார்.

முருகனுக்கு கடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இருந்த பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து களக்காடு காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் விசாரித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here