சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகளை மொழிபெயர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற பெயரில் 2006ல் புத்தகம் வெளியிட்டார்.
இதை காப்பியடித்து பாரதி புத்தகாலய தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், ’விடுதலைப் பாதையில் பகத்சிங்’ என்ற புத்தகத்தை வெளியிட்டதாக சிவக்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த மதுரை குற்றவியல் நீதித்துறை 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அறிவுசார் சொத்துரிமை, பதிப்புரிமைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் புத்தகத்தை வெளியிட்ட ஜி.ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம் நாகராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் கண்ணன், எழுத்தாளர்கள் வீரமணி, பிரபாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை, வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.













