தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை: செந்தில் பாலாஜி

0
791

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை அழகு படுத்தும் விதமாக,கோவை மாநகராட்சி ‘ஸ்ட்ரீட் ஆர்ட்’ என்ற அமைப்புடன் இணைந்து அழகிய ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி வருகிறது.

இந்த அமைப்பு, கோவை மாநகராட்சியுடன் இணைந்து உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி மற்றும் போட்டியை நடத்தியது. இதில் சிறந்த ஓவியம் வரைந்தவர்களுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர் கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படும்’ என தெரிவித்தார்.
மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி அதனடிப்படையில் தான் தங்கமணி உள்ளிட்டோர் சோதனைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here