மராட்டியம் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல்களில் கட்சிகள் தங்கள் சின்னம் மற்றும் வேட்பாளர்களை பிரபலப்படுத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரு மாநிலங்களுக்கும் இன்று சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.