பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி

0
1125


பாகிஸ்தான் கராச்சி பகுதியில் உள்ள ஷெர்ஷா பிராச்சா சௌக் அருகே இன்று நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் இருவர் ஜீஷன் மற்றும் ஷஃபி உல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பின் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here