மீரான்குளம் பள்ளி அருகே சிஎஸ்ஐ சபை சார்பில் ஆர்ச் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக சேகரத்தில் ஒரு பிரிவினர் சேகர குரு இல்லத்திற்கு சென்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அப்போது மற்றொரு பிரிவினர் அவர்களை தாக்க, மோதல் உருவானது. இதில் அதிசயராஜ் என்பவர் காயம் அடைந்தார். அவரை பாளை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சபையின் சேகர குரு முன்னிலையில் நடந்த இந்த மோதல், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












