மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கும் திட்டத்தை மதுரை அருகே கருப்பாயூரணியில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்
மொத்தம் 3894 பயனாளிகளுக்கு 2.31 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியும்,நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து பெட்டகம் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ’ கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பை கண்காணிக்க பெண்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது,கொரோனோ முதல் அலையின் போது ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்கள் ஓராண்டு ஒப்பந்த காலம் நிறைவு பெறும் முன்பே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணி வழங்க கோரி ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்’ என்றார். (மேலே வீடியோ காண்க)
சித்த மருத்துவர்கள் உட்பட 29 ஆயுஷ் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பான நிலையில், மறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














