கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் கரியமால் (80). பிள்ளைகள் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வந்தனர். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டுக்கு அருகே வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மூதாட்டி தனிமையில் இருப்பதை பயன்படுத்தி சுவர் ஏறிக்குதித்து மூதாட்டியை கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகராஜன் குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்தார் .