நடிகர் சிம்பு மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு அவர் சினிமா ஷூட்டிங்கிற்கே வர மாட்டார்,
காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால் மாலை மூன்று மணிக்கு தான் ஷூட்டிங்கிற்கே வருவார் என்பது தான் இது போல பல விமர்சனங்கள், மன்மதன் படத்திலிருந்தே சிம்புவை பின் தொடர்ந்து கொண்டே இருக்க ‘செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்பில் கொடுத்த கால்ஷீட்டுக்கு சரியாக வந்து நடித்துக் கொடுத்ததுடன் ‘இனி நான் கமிட்டாகும் படங்களில் சரியாக நடித்துக் கொடுப்பேன் என்றார்.
இந்நிலையில் தான் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு வருட காலம் ஆக இருந்த நிலையில் திடீரென சுரேஷ் காமாட்சி, படத்தில் சிம்புவை நீக்கி விட்டு வேறு ஒரு ஹீரோவை வைத்து படத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க சிம்பு இயக்கத்தில் ‘மகா மாநாடு’ என்றொரு படத்தை உருவாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு பட்ஜெட் ரூ.125 கோடியாம், ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறதாம். சுரேஷ் காமாட்சி,அறிவிப்புக்குப் பின்னர் சிம்பு போட்டிக்காக தான் இதை அறிவித்துள்ளார் என்று பேசப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கும் வியாபார சூழ்நிலையில் யார் கதாநாயகனாக இருந்தாலும் சில திரைப்படங்கள் கை விடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால், சிம்பு நடிப்பதாக அறிவித்து. நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் அதிகம் தான்
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியாகி தோல்வியடைந்த சமயத்தில் சிம்பு, ‘ஹாலிவுட் தரத்தில் ஒரு படம்’ எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தப் படத்தைப் பற்றி அதற்குப் பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
‘வல்லவன்’ வெளியாகி ஓரளவு வெற்றி பெற, சிம்பு அடுத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
‘நியூ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா சிம்புவையும் அசினையும் வைத்தும் ‘ஏசி’ என்றொரு படத்தை எடுக்க இருந்தார். இந்தப் படமும் டேக்-ஆஃப் ஆகவில்லை.
வேட்டை’ படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்பு தேர்வு செய்தார் லிங்குசாமி ஆனால் ஷூட்டிங்கிற்கு சிம்பு வராமல் காலதாமதம் செய்ததால் அவர் கழட்டி விடப்பட்டார்
இதனையடுத்து சிம்பு ‘வேட்டை மன்னன்’ என்னும் பட அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்க .’கோலமாவு கோகிலா’ பட இயக்கிய நெல்சனின் முதல் பட மான அந்தப் படத்தின் முதல் பாதி ஷூட்டிங் மட்டும் முடிவடைந்து படம் ட்ராப் ஆகிவிட்டது.
செல்வராகவன் முதன் முதலில் சிம்புவை வைத்து கான்… என்ற படம் எடுப்பதாக அறிவித்து, போஸ்டரும் வெளியானது. ஆனால், காரணம் தெரியாமலேயே அந்தப் படமும் ட்ராப்பானது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோ’. படத்தில் முதலில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தவர் சிம்பு தான். நாயகியை மாற்ற வேண்டும் என்று சொல்லியதால் இயக்குனர் நாயகனை மாற்றிவிட்டராம்
தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றி மாறன், முதலில் சிம்புவை வைத்து தான் ‘வடசென்னை’ இயக்குவதாக செய்திகள் வெளியாகின. பின் அந்தப் படத்தில் தனுஷ் நடித்து வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது
இநந்நிலையில் சிம்பு ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மாநாடு’ படமும் இந்த வரிசையில் சேர்ந்து விட்டது. இதற்குப் போட்டியாக சிம்பு ‘மகா மாநாடு’ படத்தை அறிவித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, படம் , வெளியாகி, வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.