கோவை பாலியல் ஆசிரியரை 2 நாள் போலீஸ் விசாரிக்க அனுமதி

0
422


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்டூ மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி சாவுக்கு ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணம் என புகார் எழுந்தது. இதையடுத்து
தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மீரா ஜாக்சனுக்கு நேற்று ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது .

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி யை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த விசாரணை இன்று காலை வந்தது. இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். முகத்தை மூடிய நிலையில் அழைத்துவரப்பட்ட மிதுன் சக்கரவர்த்தி சக்கரவர்த்தியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் இந்த சக்கரவர்த்தியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின்
ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு உள்ள சூழலில் ஆசிரியரை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று இருப்பது இந்த வழக்கில் மேலும் திருப்பங்களை ஏற்படுத்தும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here