நெல்லையில் கனமழை: பேட்டை-பழைய பேட்டை இணைப்பு சாலை துண்டிப்பு

0
979


நெல்லையில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது.மாவட்டம் முழுதும் தண்ணீர் அதிகரிப்பால் சாலை, குளங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. குறிப்பாக நெல்லை பேட்டையில் இருந்து பழைய பேட்டை செல்லும் இணைப்பு சாலை மற்றும் திருப்பணிகரிசல்குளம் செல்லும் புதிய சாலை பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையில் சாலையில் காட்டாறு வெள்ளம் கரை புரண்டு ஓடியது; இதனால் கரிசல்குளம் சென்ற டவுன் பஸ் செல்ல முடியாமல் திண்டாடியது. பள்ளி மாணவ, மாணவர்கள் பலர் மழையில் நனைந்த நிலையில் இந்த சாலையில் நின்றனர்.பஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.தண்ணீர் பெருக்கெடுத்து சென்ற காரணத்தால் பஸ்ஸை அந்த சாலையில் இயக்க சிரமம் ஏற்பட்டது இரு சக்கர வாகனங்கள் மூழ்கின. பலர் சாலையை கடக்க முயன்றநிலையில் தண்ணீர் இழுத்து சென்றது. எனவே அனைத்து வாகனங்களும் சுத்தமல்லி, கொண்டாநகரம் வழியாக கரிசல்குளம் சென்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here