திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம் யாக்கோபுபுரம் ஊராட்சி தலைவராக டாலின் ஜான்சி உள்ளார். நேற்று காலை அவரும் துணைத்தலைவர் பூமணியும் ஊராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, பெர்லின் ராஜா, ராஜதுரை, கிருஷ்ணகுமார், பத்ரகாளி, சாந்தி உள்ளிட்ட சிலர் வந்து பழவூர் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு ரசீது போடச்சொல்லி மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். தன்னை இயற்கை உபாதையை கழிக்கக் கூட விடாமல் முற்றுகையிட்டு, அலுவலகத்துக்குள் சிறை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பியுள்ள மனுவில், ‘இதுகுறித்து தகவல் அறிந்து உதவி ஆய்வாளர் கண்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பழவூரில் கட்டப்பட்ட 2 வீடுகளுக்கு ரசீது போட வற்புறுத்தியதால் அவ்வாறு செய்தேன். எனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.







