அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ஒட்டுமொத்த நிராகரிப்பு

0
761

சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முன்னதாகவே மண்டபத்திற்கு வந்திருந்த ஓபிஎஸ் மேடை ஏறாமல் இருந்தார். 8 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட இ பிஎஸ் க்கு வழி எங்கும் பரவலான வரவேற்பு வழங்கப்பட்டது. அரங்கத்திற்குள் வந்து மேடையில் ஏறும் வரை பரபரப்பு காணப்பட்டது.

தமிழ்மகன் உசேனை கூட்டத் தலைவராக ஓபிஎஸ் முன் மொழிய, இபிஎஸ் வழிமொழிந்தார்.

அதைத்தொடர்ந்து திடீரென்று எழுந்த சிவி சண்முகம் பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப் படுகிறது என அறிவித்தார். அதை வழிமொழி வது போல கேபி முனுசாமி ஒற்றை தலைமை என்ற ஒரு தீர்மானத்தை இணைத்து பொதுக்குழுவுக்கு கூட்டப்படும் வரை பொதுக்குழு கூட்ட தீர்மானம் நிராகரிக்கப் படுகிறது என்று கூறினார். பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here