கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் இவரது மகள் சந்தியா (23 ). பெங்களூருவில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தியா தனது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் தாமஸ் என்பவரின் மகன் பாக்கியநாதன் ரூபன் (39) என்பவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியா சத்தம் போட்டார். உடனே அங்கிருந்து பாக்கியநாதன் தப்பிச் சென்று தனது வீட்டிறகுள் ஒளிந்து கொண்டார்.
இதையடுத்து சந்தியா தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறினார். தொடர்ந்து சந்தியா மற்றும் அவரது பெற்றோர் பாக்கியநாதன் வீட்டுக்கு சென்று கேள்வி எழுப்பினர் .அப்போது இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டு சந்தியா குறித்து அவதூறாக பாக்கியநாதன் பேசியுள்ளார். இதையடுத்து சந்தியா பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தினர். தொடர்ந்து இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பாக்கியநாதன் ரூபன் (39) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












