சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கம்பட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பலரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் டிக்டாக் செயலி, இவரையும் விட்டுவைக்கவில்லை. தனது செல்போனில் டிக் டாக் செயலியில் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி. இதையடுத்து திடீரென ராஜேஸ்வரி சிக்கம்பட்டியில் இருந்து புளியம்பட்டி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
ராஜேஸ்வரி அரசு அலுவலகத்தில் இருந்து டிக்டாக் செய்ததே இடமாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, அவரது டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.














