தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூகவலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும்தாலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தமிழக உளவுத்துறை, மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட ஐந்து வலைதள கணக்குகளை உளவுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். கோவையிலும் ஒரு சிலரின் சமூக வலைதள பதிவுகளை சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
கோவையில் ஏற்கனவே ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையிட்டு லேப்டாப், சி.டி. கைப்பற்றினர். கேரளா, கனகமலை பகுதியில், ஆறு ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக கோவையில் சோதனையிட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கோவையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால், தற்போது கோவை மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் உள்ள நபர்களின் சமூக வலைதள கணக்குகள், அவர்களின் கருத்துக்கள், இவர்கள் யாரை பின்தொடர்கிறார்களா போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. சட்டவிரோத கருத்துக்களை யார் பதிவு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்வதாக 15 க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.