கோவில்பட்டி அருகே கார் விபத்து ஒருவர் பலி

0
341

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அல்லூரை சேர்ந்த கண்ணன்(33) .சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு இருந்த நிலையில் திருச்சி பகுதியை சேர்ந்த சிலரை கண்ணன் நெல்லைக்கு தனது காரில் அழைத்துச் சென்றார் . நெல்லையில் அவர்களை இறங்கி விட்டு ஊருக்கு திரும்பியபோது கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல்அருகே எதிர்பாரா விதமாக சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் கண்ணன் உயிரிழந்தார். விபத்து குறித்து கோவில்பட்டி

மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here