கோவை அடுத்த கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மா நாயுடு என்பவரின் மகன் மனிராஜ் (57). லேத் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுபாஷினி (15 )வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்
.பள்ளிக்கு சுபாசிணியும் அவரது சகோதரியும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் சகோதரியுடன் வீடு திரும்பினார் .பின்னர் இரவு உணவை சாப்பிடாமல் படிப்பதாக கூறி விட்டு தனது அறைக்கு படிப்பதாக கூறி விட்டு சுபாஷினி சென்றுவிட்டார் .சிறிது நேரம் கழித்து அவரது சகோதரி அறைக்கு சென்று பார்த்தபோது சுபாஷினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவரது தந்தை மணிராஜ் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுபாஷினி அவரது தோழியின் சகோதரர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. இந்த விவரம் சுபாஷினியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுபாஷிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.