நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர் 30 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு அணைக்கு மேலே வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி உள்ளது இந்த மலைக்கு மேலே கோதையாறு அணை உள்ளது. கோதையாறில் இருந்து மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் லாரியில் அங்கு உள்ள மின்சார வயர் மற்றும் மின்சார பழைய பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டு 32 பேர் அந்த லாரியில் கோதையார் பகுதியில் இருந்து கீழே வரும்போது மணிமுத்தாறு அருவிக்கு மேலே தலையணை பகுதியில் அந்த லாரியின் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் வந்த பொன்னுதுரை,பூதப்பாண்டி என இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலுயே உயிரிழந்தனர். மேலும் லாரியில் பயணம் செய்த மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்








