ஆம்னி வேனை விரட்டிச் சென்று சாத்தான்குளம் தாசில்தார் கடத்தல்ரேஷன் அரிசி வேட்டை

0
1212

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணியளவில் தட்டார்மடம் விலக்கில் சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா மற்றும் வட்டவழங்கல் அலுவலர் அகிலா கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உடன்குடியிலிருந்து திசையன் விளை நோக்கி ஒரு ஆம்னி வேன் வந்தது. அதை வருவாய்த்துறையினர் நிறுத்த முயற்சித்த போது அது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சினிமா பாணியில் வேகமாக விரட்டிச் சென்றனர்.

அப்போது சாஸ்தாவின் நல்லூர் கிராமம் வைரவம் ஊர் அருகே ஆம்னி வேன் நின்றது அதிலிருந்து டிரைவர் தப்பி ஓடி விட்டார் . ஆம்னி வேனை சோதனையிட்டதில் சுமார் 25 மூடைகள் கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேற்படி கடத்தி வரப்பட்ட வாகனத்தையும், மேற்படி வாகனத்தில் உள்ள ரேசன் அரிசியும் தட்டார்மடம் காவல் நிலையத்தில் மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here