நாங்குநேரியில் அமைச்சர்கள் பெரும்பாலானோர் முகாமிட்டுவிட்டனர். ஒவ்வொருவரும் வித்தியாசமான முறைகளை கையாண்டு பிரச்சாரம் செய்கின்றனர். அதிரடி அமைச்சரான ராஜேந்திரபாலாஜி தெற்கு காடுவெட்டிக்கு சென்றபோது, அவ்வூர் பெண்கள் பஸ் வசதி கேட்டனர்.
உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அந்த பெண்ணிடம் கொடுத்தார் அமைச்சர். போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கையை தெரிவித்த பெண்ணுக்கு முகமெல்லாம் பூரிப்பு. ‘ அமைச்சர் பஸ் வசதி செய்து தருவதாக கூறிவிட்டார்’ என சந்தோஷமாக கூறினார்.
எல்லாம் சரிதான், இப்படி துறைசார்ந்த காரியஙக்ளை செய்வதாக உறுதியளித்து வாக்கு கேட்கலாமா என்பதை தேர்தல் ஆணையம்தான் சொல்லவேண்டும்.














