கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது

0
451


கோவை உக்கடம் பகுதியை மாணவி பொன் தாரணி ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொசெ ய்து கொண்டார் இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற் றோர்கள் புகார் அளித்தனர்

. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின் றனர். மாணவியின் உடல் உடற்கூராய் விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தா ண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோ ரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வா கத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக் கையும் இல்லை எனவும் உறவின ர்கள் தெரிவித்தனர்

. மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையை புதிதாக சேர்ந்த பள்ளி நிர்வாகம் வழங்கி யதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித் தனர்.
இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி யை பிடித்து காவல் துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசார ணை செய்து வந்தனர். இதை யடுத்து நேற்றிரவு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்


இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி, உட லை மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காதது தான் தற்கொலைக்கு காரண மெனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே புகாருக்கு உள்ளான பள்ளியில், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு கோவை மாநகர துணை ஆணையாளர் ஜெயச்சந் திரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்த வழக்கில் குற்றச்செயலில் ஈடுப ட்டவர் நேற்றே கைது செய்து நீதிமன்ற காவ லுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த சம்பவம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடி க்கை எடுக்கப்படும். மாணவி எழுதிய கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here