பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை

0
1344

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது மனைவி ரோகிணி பிரபா இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் மனோஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது இந்நிலையில் இன்று திருஷ்ணசாமி மனைவி ரோகிணி பிரபாவிடம் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். மனைவி ரோகினி பிரபா தன்னிடம் பணம் இல்லை என்றும், மாமனாரிடம் பணம் வாங்கித்தருவதாகவும் கூறி உள்ளார்.


ஆனால் கிருஷ்ணசாமி
பெட்ரோலுக்கு
பணம் கேட்டு கொடுக்காததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here