கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தனர்.
அங்கு மருத்துவம், கால்நடை வளர்ப்பு, கல்வி தொடர்பான நிறுவனங்களை பார்வையிட்டனர். வெளிநாட்டு முதலீட்டை கொன்டுவந்ததாக முதல்வர் தெரிவித்தார். அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் எழுந்தது. பின்லாந்து பயணத்தை முடித்துவந்த செங்கோட்டையன் அந்நாட்டு கல்வி முறைக்கு மாறாக சில முடிவுகளை அறிவித்ததும் ஆட்சேபிக்கப்பட்டது.
தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 8ஆம்தேதி அவர் புறப்பட்டு சிகாகோ உள்ளிட்ட இடங்களில் நகர்புற வளர்ச்சி குறித்து பார்வையிடுவார், 10 நாட்கள் அவரது பயணம் இருக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஓபி எஸ் பயணத்தின் பயன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.














