திருச்செந்தூர் ரயிலில் போலி டிடிஆர்

0
5753

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிக்கடி போலி டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆறாம் தேதி மாலையில், திருநெல்வேலி திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலில் 25 வயது மதிக்க தக்க ஒரு நபர், டிக்கெட் பரிசோதகர் என கூறிக்கொண்டு ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார்.

குடும்பமாக வந்த சிலரிடம், குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டும் என்று சொல்லி ஒரு சிலரிடம் அபராதத் தொகையை வசூலித்துள்ளார், விபரம் அறியாத பயணிகள் அந்த அபராத தொகையை கட்டியுள்ளனர்.

அப்போது அதே ரயிலில் வழக்கமாக பயணம் செய்யும் சிலரிடம் இதே போல் நடக்க முயன்ற போது, அவர்கள் சுதாரித்துக் கொண்டு அடையாள அட்டையை காட்டுமாறு கேட்க, போலி டிக்கெட் பரிசோதகர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இறங்கி ஓடி மறைந்து விட்டார்,

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் நிலைய அலுவலரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்று அன்று ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரத்தில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் அதிகாரிக்கு தமிழ் தெரியாத காரணத்தினால், டிக்கெட் கொடுக்காமல் விட்டதில் சுமார் 300 பயணிகள் ரயிலில் பயணம் செய்தது செய்தியானது.

இந்நிலையில் போலி டிக்கெட் பரிசோதகர் நடமாட்டமும் ரயில்வே துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here