தேவேந்திரகுல மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார் பரமக்குடியில் கைது செய்யப்பட்டார். ராஜ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
7 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ராஜ்குமார் தொடர்புடையவர் என தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இடையே, சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான் (47)இரு கார்களில் தனது ஆதரவாளர்களுடன் நடுவக்குறிச்சியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.
மேலப்பாட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பாளை. தாலுகா போலீசார், கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் 7 எம்எம் கைத்துப்பாக்கி, 4 நாட்டு வெடிகுண்டுகள், 5 அரிவாள்கள், 2 கத்தி, மிளகாய் பொடி பாக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து கண்ணபிரான் உள்பட 15 பேரையும் பாளை. தாலுகாபோலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிந்து கண்ணபிரான், அவரது ஆதரவாளர்கள் அருண்குமார் (32), ராக்கி என்ற சிவா, ஷெரீன், அபினேஷ், மதிபாலன், சிவா, முத்துசெல்வன், உய்காட்டான், பாலாஜி, துரைபாண்டி, கார்த்திக் உள்பட 15 பேரை கைது செய்தனர்.















