பொது இடத்தில் பெண்ணுக்கு முத்தம் – கோவை போலீஸ்காரர் சீருடை கழற வாய்ப்பு

0
1015



கோவை உக்கடம் வாலாங்குளம் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள பூங்காவில் இன்று மதியம் சீருடையில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவரும்,பர்தா அணிந்த ஒரு பெண்ணும் முத்தம் கொடுத்து கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர்.இது அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

இதைப் பார்த்த சிலர் அவர்களிடம் சென்று ஏன் இப்படி பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள்?.உங்கள் பெயர் என்ன?எந்தக் காவல் நிலையத்தில் பணி புரிகிறார்கள்.என்று கேட்டனர் அதற்கு அவர் தனது பெயரை பாலாஜி என்றும் பி4 காவல் நிலையத்தில் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.பட்டப்பகலில் சீருடையில் பர்தா அணிந்த ஒரு பெண்ணுடன் போலீஸ்காரர் இப்படி கேவலமாக நடந்து கொள்வது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here