வசந்தகுமார் எம்.பி. மரணம்

0
1481


கொரோனா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 முதல் சிகிச்சை பெற்றுவந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் இன்று மாலை 6 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 70. இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் தம்பியாவார். வசந்த் அன் கோ என்ற வணிக நிறுவனத்தையும், வசந்த் தொலைக்காட்சியையும் நடத்திவந்தார்.
வர்த்தக காங்கிரஸ் தலைவராக பணிபுரிந்தவர். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
வசந்தகுமார் மறைவு அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். எப்போது பேசினாலும் தமிழ்நாட்டின் நலனைப்பற்றியே பேசுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here