தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை லாரி, பிக்கப் ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி சென்று வீடு தேடி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பணுர் சோதனைச்சாவடியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த பிக்கப் ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை கொண்டு செல்வது போல் மேலே முழுவதும் காய்கறி கூடைகளை அடுக்கிவிட்டு வாகனத்தில் 1 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் போதனை மேற்கொண்டிருந்த போது ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் நைசாக தப்பி ஓடி விட்டார்.வாகனம் மற்றும் 1 டன் அரிசியை பறிமுதல் செய்த கிராமிய போலீஸார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே காய்கறி ஏற்றி சென்ற வாகனத்தில் மறைத்து 1 டன் ரேஷன் அரிசி கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…