கொரோனா அச்சத்தால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

0
424


பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தென்குமார பாளையத்தை சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (50). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து வந்த அக்காள் மகனுக்கு திடீரென கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது தாயாருக்கும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவரையும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் முத்துராமலிங்கம் மனவேதனை அடைந்தார். மேலும் தனக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என அச்சம் அடைந்தார்.


இதனால் விரக்தி அடைந்த அவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here