தாமிரபரணி மணல் கொள்ளை:உயர்நீதிமன்ற குழு ஆய்வு

0
663

தூத்துக்குடி மாவட்டம் அகரம் அருகே தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட ஒப்பந்தப் பணி நடைபெற்றது. அப்போது அணைக்காக தோண்டப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட மணலை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உடந்தையோடு ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கடத்தியதாக அகரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் புகார் செய்தார்.

காவல்துறையினர் சோதனையில் 4 லாரிகள் பிடிபட்டன.மணல் கடத்தல் பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பாலகிருஷ்ணனை ஒப்பந்ததாரர் சண்முகவேல் உத்தரவின்பேரில் சிலர் மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் அவர் அளித்த மனு, நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வுக்கு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் கடத்தல் பற்றி கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,அதுகுறித்து ஆய்வு நடத்த நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தனர்.

அந்தக் குழு நேற்றும் இன்றும் அகரம் அணைக்கட்டு பகுதியில் மணல் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here