மரபான பயிர்களை, உணவுப்பழக்கத்தை மீட்டெடுக்க பலரும் களத்தில் உள்ளனர். ஆனா, அவர்கள் முயற்சியை மீறி தடையற்ற வகையில் மரபணு மாற்ற பயிர்களும், உணவுகளும் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டன.
வியாபார ரீதியில் மரபணு மாற்ற கடுகு பயிரிட ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இதற்கான ஒப்புதலை அளித்திருக்கிறது. இது தொடர்பாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட சிலர் மட்டும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு கடிதம் எழுதினர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களைப் பயிரிடும் முயற்சியை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்த பாஜக செயல்படுத்துகிறது. 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு உரிய விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் அனுமதி அளிக்க மாட்டோம்’ என பாஜக அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
மரபணு மாற்ற கடுகு பயிரிடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் அருணா ரோட்ரீக்ஸ் என்பவர் தொடுத்த வழக்கின்போது, ‘மரபணு மாற்ற பயிர்களை அனுமதிப்பதற்கு முன்னர் உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறவேண்டும்’ என அட்டர்னி ஜெனரலிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை மீறி இந்த முயற்சி நடந்தது.
மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பயிர்களால் அதை உண்ணுகிற கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுமென்று அனைத்து ஆய்வுகளும் தெளிவுபடுத்துகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மரபணு மாற்ற பருத்தியை கையாளும் விவசாயிகளுக்கு கைகளில் அரிப்பு, உடலில் வெடிப்பு, முகம் வீங்குதல் முதலான பிரச்னைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
பணப்பயிரான பருத்தியாலே இந்த தீய விளைவு என்றால், உணவுப்பயிர்களால் என்ன விளைவு ஏற்படும் என்பது எண்ணிப்பார்க்க முடியாததாக உள்ளது.
பி.டி. பருத்தியைத் தொடர்ந்து பி.டி. கத்திரிக்காயை வணிகரீதியில் பயிரிடுவதற்கு 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.
அந்த பி.டி. கத்திரிக்காயின் செல்களில் ஒருவிதமான புரோட்டீன் உருவாக்கப்படுகிறது. அது ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்கும் திறனை கத்திரிக்காய்க்கு அளிக்கிறது. இந்த புரோட்டீன் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது பி.டி. கத்திரிக்காயில் கலோரி அளவும் பதினைந்து சதவிகிதம் வரை குறைவாக உள்ளது. இந்த கத்திரிக்காயில் பூச்சி தாக்காமல் இருப்பதற்காகச் சேர்க்கப்பட்டுள்ள டாக்ஸின் விலங்குகளின் ரத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது,
‘‘மரபணு மாற்றப்பட்ட பயிர் நம் மண்ணுக்கும் உடம்புக்கும் பொருந்தாதது. அது சிறுநீரகக் கோளாறு, தோல் நோய், ஒவ்வாமை, இதய நோய், புற்றுநோய் என 50க்கும் மெற்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் ஒவ்வாமை ஏற்படலாம். உடல்நலம் பாதிக்கலாம். பயிரிடப்படும் நாட்டின் உயிர்ச்சூழல் மாற்றமடையலாம் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்துள்ளது. உலகில் 160 நாடுகளில் மரபணு மாற்றப் பயிர்களுக்குத் தடை உள்ளது.
அந்நிய மரபணு தொழில்நுட்பம், மிகவும் ஆபத்தானது . ஒரு முறை இதைப் பயன்படுத்திய பின், அந்நிய மரபணுவை மாற்றியமைக்கவே முடியாது.
பயிர்களின் டிஎன்ஏ அல்லது பாரம்பரிய அமைப்பை மாற்றி மரபணு மாற்ற பயிர்கள் உருவாக்கபப்டுகின்றன, டிஎன்ஏவின் இழைகளையோ, ஓர் உயிரியின் டிஎன்ஏ விலிருந்து குறித்த மரபணுக்களையோ வெட்டவும், முழுமையாகத் தொடர்பே அற்ற வேறொரு உயிரியின் டிஎன்ஏவுக்குள் அவற்றை ஒட்டவும் செய்கிறார்கள்.
மனிதன், விலங்குகள், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சணங்கள், தாவரங்கள் போன்ற முழுமையாக வேறுபட்ட இனங்களிலிருந்து மரபணுக்களைக் கலப்படம் செய்கிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த இதய நல நிபுணர் வில்லியம் டேவிஸ் 2011ல் எழுதிய ‘வீட் பெல்லி‘ நூலில்,’மரபணு மாற்ற கோதுமை நம் மூளையில் ஓப்பியம் எனும் போதை மருந்து ஏற்படுத்துவதற்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தி பசியைத் தூண்டுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட குட்டை ரக கோதுமை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் கோதுமையை உண்ணும்போது சர்க்கரை அளவு அதிகரித்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். க்ளூட்டன் எனும் புரதம் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புகையிலைத் தாவரங்கள் மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலம் காமா லினோலீயிக் அமிலத்தை உற்பத்தி செய்யுமாறு மாற்றப்பட்டன. இது உணவுத் தொழிலில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
1998ல், பூச்சிகளைக் கொல்வதாக உருவாக்கப்பட்ட மபரணு மாற்ற உருளைக்கிழங்கு, நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள், முடமாக்கப்பட்ட உறுப்புவளர்ச்சி, தொண்டைக்குழல் உட்புறத்தோலில் மாற்றங்கள் எனப் பல கடுமையான உயிரியல் பிரச்சனைகளை ஏற்பத்துஜ் என எலிகளில் சோதித்தபோது தெரியவந்தது.
அதிகமான புரோட்டீனைத் தருவதற்காக சோயா அவரைக்குள் பிரேசில் பருப்பிலிருந்து எடுத்த ஒரு மரபணு செலுத்தப்பட்டது. ஒவ்வாமை உடைய நபர்கள் எல்லோருக்கும் இந்த சோயா அவரையால் மோசமான எதிர்வினை உண்டாயிற்று என்று பின்னர் நடந்த சோதனைகள் காட்டின. அந்த உற்பத்திப் பொருள் நிறுத்தப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட சோயாவால் உணவு ஒவ்வாமை 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} கூடுதலாக அதிகரிக்கிறது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த சோயாவ இஉண்டால், செரித்த பிறகு அதிலிருக்கும் புரோட்டீன் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. குடல் எரிச்சல் உணர்வு, செரிமானப் பிரச்சினைகள், தோல்நோய்கள், மிகுகளைப்பு, தலைவலி அறிகுறிகள் தோன்றுகின்றன.
களைக்கொல்லிகளை எதிர்க்குமாறு உருவாக்கப்பட்ட சோயாவில் பாக்டீரியா, பெடூனியா, ஹெபாடைடிஸ் பி மற்றும் எச்ஐவியை உண்டாக்கும் வைரஸ் போன்றவை அடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணத் தக்காளியில் மீனின் மரபணுவை புகுத்தி கடுங்குளிரைத் தாங்கவல்ல புதிய தக்காளி உருவாக்கப்படுகிறது.
மரபணுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த உணவுப்பொருள்கள்-காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் நம்நாட்டில் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்துவிட்டன.
மரபணு மாற்றத்தால் உருவான ஆப்பிள்கள், பப்பாளிகள், மாதுளைகள் போன்றவை சந்தைக்கு வந்துவிட்டன.
இப்படி உணவை நஞ்சாக்கும் வேலை பசுமை புரட்சியின்போதே தொடங்கிவிட்டது.
நெல், கோதுமையின் பல நூறு ரகங்கள் அழிக்கப்பட்டு சில ரகங்களாக சுருக்கப்பட்டது. விதைப் பன்மயத்தை அழித்து விவசாயிகளிடம் இருக்கும் விதை உரிமையைப் பறிப்பது இப்போது நடக்கிறது,
டிராக்டர் மற்றும் யூரியா தயாரிக்கும் ராக்பெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் உதவியுடன் உலக பசுமைப்புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் மெக்சிகோவில் குட்டை ரக கோதுமை பயிரை உருவாக்கினார்.
இந்தியாவுக்குள் வந்த அந்த குட்டை ரக கோதுமை பல விவசாயிகளை கடனாளியாக்கியது, ஆனால், அதை உற்பத்தி செய்ய உதவிய நிறுவனங்கள் பசுமை புரட்சியால் லாபம் ஈட்டின.
பசுமை புரட்சியால் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டன, கோதுமையில் சைபர் மெத்ரின், பைரிடான், சைக்ளோ 3 போன்ற ரசாயன உரங்கள் அதிக அளவில் தெளிக்கப்படுகின்றன. அதை உட்கொள்ளும்போது ரசாயனத்தின் எச்சங்கள் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்கிறது. மேலும் நீரிழிவு, தைராய்டு, அட்ரினல் போன்ற நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டில் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் கோதுமை மாவை பூச்சி தாக்காமலிருக்க அதில் உள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகின்றனர். அனைத்திலும் அதிக பாதிப்பு, மறைமுக பாதிப்பு மரபணு மாற்ற பயிர்களால் வருகிறது.
மரபணு மாற்ற பயிர்களால் பூச்சி மருந்துகளின் பயன்பாடு குறையும். அதனால் விவசாயிகளின் செலவு கணிசமாகக் குறையும் என்பது உண்மை இல்லை என பி.டி. பருத்தியைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மரபணு மாற்ற உணவுப்பொருள்கள் இந்தியாவின் உணவுத் தேவையை ஈடுசெய்வதற்காகவே கொண்டு வரப்படுவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சாதாரணமாகவே நம் நாட்டில் பெரும்பாலும் உணவுப்பற்றாக்குறை இல்லை.
இங்கே மரபணு மாற்ற உணவுப்பயி£ல் பலனடையப் போவது பன்னாட்டு முதலாளீகள்தாம். உலகின் விதை விற்பனை சந்தையில் 42{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பங்கு அமெரிக்காவின் மான்சாண்டோ, டு பாண்ட், லேண் ஓ லேக்ஸ் ஆகிய மூன்று பன்னாட்டு நிறுவனங்களிடம் இருக்கிறது.
‘குறிப்பிட்ட ஒரு உணவைச் சாப்பிடுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நோய் குணமாகும் என்பது மக்களிடையே பரவலாக இருக்கும் கருத்து. ஆனால் இப்போது எந்த உணவை சாப்பிட்டால் எந்த நோய் வரும் என்று ஒரு பட்டியலே இருக்கிறது.
‘‘பெரும் உணவுச்சந்தையைக் கொண்ட நாடு இந்தியா. அதைக் கைப்பற்றுவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பல முயற்சிகளை செய்து வருகின்றன. அதன் தொடர்ச்சியே தாவர விதை.
மரபணு மாற்றப் பயிர்களில் விதை எடுக்கமுடியாது. மரபணுவை மாற்றும்போது விதையை மலடாக்கும் மரபணுவையும் சேர்த்தே புகுத்தி விடுகிறார்கள். விதையின் பரபணுவை நீக்கும்போது மனித மரபணுவை மாற்றாதா? விவசாய உற்பத்தியை முடக்காதா?
விவசாய விஞ்னானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றோர் மரணங்கள் நம் மரபுப்பயிர்களை விளைவிக்கும், அதன் விதைகளை மீட்டெடுக்கும் கட்ட்டாயத்தை நமக்கு கற்பிக்கின்றன.